சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சி அருகே கார் விபத்தில் இருவர் பலி

Added : அக் 13, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.புதுக்கோட்டை, பொன்னமராவதியை சேர்ந்த சிவராஜா, 48, திண்டுக்கல், குஜிலியம்பாறை மனோகரன், 49, காஞ்சிபுரத்தை சேர்ந்த தில்லி, 45. இவர்கள் மூவரும் நண்பர்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். நேற்று மதியம், 1:30 மணியளவில் வியாபாரம் தொடர்பாக மூவரும்

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை, பொன்னமராவதியை சேர்ந்த சிவராஜா, 48, திண்டுக்கல், குஜிலியம்பாறை மனோகரன், 49, காஞ்சிபுரத்தை சேர்ந்த தில்லி, 45. இவர்கள் மூவரும் நண்பர்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். நேற்று மதியம், 1:30 மணியளவில் வியாபாரம் தொடர்பாக மூவரும் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரையை நோக்கி ஹோண்டா அகார்டு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சிவராஜா ஓட்டினார். அவர்கள் பயணம் செய்த கார் பொண்ணாகவுண்டனுார் அடுத்த மேட்டுப்பட்டி பிரிவு பகுதியை கடந்தபோது, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து பாறையில் மோதி நின்றது.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவராஜா, மனோகரன் இருவரும் உயிரிழந்தனர். தில்லி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X