உப்பிடமங்களம் சந்தையில் சேதமடைந்த நிலையில் மேடைகள்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கரூர் : உப்பிடமங்களம் சந்தையில், வியாபார மேடைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், உப்பிடமங்களத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை சந்தை கூடுகிறது. திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், உப்பிட மங்களம் சந்தைக்கு வருகின்றனர்.புலியூர், ஜெகதாபி, வீரராக்கியம்,

கரூர் : உப்பிடமங்களம் சந்தையில், வியாபார மேடைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்களத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை சந்தை கூடுகிறது. திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், உப்பிட மங்களம் சந்தைக்கு வருகின்றனர்.புலியூர், ஜெகதாபி, வீரராக்கியம், மணவாசி பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்களை வாங்க, உப்பிடமங்களம் சந்தைக்கு வருகின்றனர். இதனால், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமையில், உப்பிட மங்களம் சந்தை பகுதிகள் களை கட்டி இருக்கும்.

இந்நிலையில், சந்தையில் உள்ள வியாபார மேடைகள், கூரைகள் சேதம் அடைந்துள்ளன. மழைக் காலங்களில், பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை என, வியாபாரிகள் புலம்புகின்றனர். மேலும், சந்தைக்கு கால்நடைகளை வாங்கவும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால், சேதமடைந்த வியாபார மேடைகள், கூரைகளை சீரமைக்க வேண்டும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X