டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் பலி

Added : அக் 13, 2021
Share
குளித்தலை : கரூர், தான்தோன்றிமலையை சேர்ந்த முருகேசன் மகன் ரியாஸ், 10. இவர், சிறுவயதில் இருந்து கொசூர் பஞ்.,குப்பமேட்டுபட்டியில் உள்ள தன் தாத்தா மணிவேல் வீட்டில் வசித்து வந்தார். குப்பமேட்டுபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மணிவேல் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில், ஒரு டிராக்டர் இன்ஜின் மூலம் உழவு

குளித்தலை : கரூர், தான்தோன்றிமலையை சேர்ந்த முருகேசன் மகன் ரியாஸ், 10. இவர், சிறுவயதில் இருந்து கொசூர் பஞ்.,குப்பமேட்டுபட்டியில் உள்ள தன் தாத்தா மணிவேல் வீட்டில் வசித்து வந்தார். குப்பமேட்டுபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மணிவேல் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில், ஒரு டிராக்டர் இன்ஜின் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் ரியா ைஸ, இன்ஜின் மீது அமர வைத்துள்ளார். அதில் அமர்ந்து இருந்த ரியாஸ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். டிராக்டர் இன்ஜினில் பொருத்தபட்டு இருந்த, ரொட்ரேட்டர் களப்பையில் சிக்கிய ரியாஸ் காயமடைந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கும், குளித்தலை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரியாஸ் இறந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X