பொது செய்தி

தமிழ்நாடு

;ரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை; பஞ்சப்பட்டியில் 55 மி.மீ.,கொட்டியது

Added : அக் 13, 2021
Share
Advertisement
கரூர் : கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. பஞ்சப்பட்டியில், 55 மி.மீ., மழை பெய்துள்ளது.மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த

கரூர் : கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. பஞ்சப்பட்டியில், 55 மி.மீ., மழை பெய்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,)
கரூர், 3, அரவக்குறிச்சி, 3.6, அணைப்பாளையம், 27, க.பரமத்தி, 4, குளித்தலை, 5, தோகமலை, 20, கிருஷ்ணராயபுரம், 6, மாயனுார், 7, பஞ்சப்பட்டி, 55.6, கடவூர், 4.2, பாலவிடுதி, 19.4, மயிலம்பட்டி, 26 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 15.10 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அமராவதி அணை நிலவரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டையில் உள்ள, அமராவதி அணைக்கு வினாடிக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 480 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில், 500 கன அடி தண்ணீரும், புதிய வாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 82.81 அடியாக இருந்தது.

மாயனுார் கதவணை நிலவரம்
கரூர் அருகே உள்ள மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 3,060 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில் சாகுபடி பணிக்காக, 2,040 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X