பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டுகோள்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கரூர் : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என, காவிரி நீர்ப்பாசன நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளின் தனிநபர் குறைகள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுள்ளது. பட்டா மாறுதல், கொள்முதல், கடன் வசதி, அரசு மானியம் ஆகியவற்றில் குறைகள் தீரவில்லை. கலெக்டர் தலைமையில் நடக்கும், குறைதீர் கூட்டங்களில்

கரூர் : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என, காவிரி நீர்ப்பாசன நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளின் தனிநபர் குறைகள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுள்ளது. பட்டா மாறுதல், கொள்முதல், கடன் வசதி, அரசு மானியம் ஆகியவற்றில் குறைகள் தீரவில்லை. கலெக்டர் தலைமையில் நடக்கும், குறைதீர் கூட்டங்களில் முழுமையாக குறைகள் களையப்படாவிட்டாலும், ஓரளவு குறைகள் களையப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகள், குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. ஆன்லைன் மூலம் குறை கேட்டும் முறை, ஒன்றிய அலுவலகங்களில் சரியாக அமல்படுத்தப்படவில்லை. எனவே, அரசு உடனடியாக கலெக்டர் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X