பொது செய்தி

இந்தியா

எடியூரப்பா ஆதரவாளர்களிடம் வருமான வரித்துறை சோதனையில் ரூ.487 கோடி சிக்கியது

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
பெங்களூரு : பா.ஜ.,வை சேர்ந்தவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சமீபத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத 487 கோடி ரூபாய் சிக்கியதாக தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மூத்த மகனும், எம்.பி.,யுமான ராகவேந்திரா ஆகியோரின் அந்தரங்க உதவியாளராக இருந்த உமேஷ், அவரது மற்றொரு

பெங்களூரு : பா.ஜ.,வை சேர்ந்தவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சமீபத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத 487 கோடி ரூபாய் சிக்கியதாக தெரியவந்துள்ளது.




latest tamil news


கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மூத்த மகனும், எம்.பி.,யுமான ராகவேந்திரா ஆகியோரின் அந்தரங்க உதவியாளராக இருந்த உமேஷ், அவரது மற்றொரு மகன் விஜயேந்திராவின் நெருங்கிய நண்பர் அரவிந்த். இவர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.


இது குறித்து வருமான வரித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 382 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என ஒரு நிறுவனமும், 105 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என மற்றொரு நிறுவனமும் ஒப்புகொண்டுள்ளன.



latest tamil news


இது தவிர, சோதனை நடந்த பிற இடங்களில், கணக்கில் காட்டப்படாத, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள, முதலில் இடம் பெற்றுள்ள இரண்டு நிறுவனங்களும் எடியூரப்பா ஆதரவாளர்களுக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-அக்-202112:58:09 IST Report Abuse
ஜெயந்தன் அடிச்ச மொத்த 2000 ரூ நோட்டும் இவனுங்க கிட்டதான் இருக்கு.. ஒண்ணு கூட வெளியில் வரவில்லை.. செல்லாது என்றும் அறிவிக்கவில்லை..ஏனென்றால் மொத்த நோட்டும் பிஜேபி காரனிடம் தான் இருக்கிறது..இந்த செய்தியே சாட்சி..
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
13-அக்-202112:05:52 IST Report Abuse
Dhurvesh அப்போ இது BJP ஊழலில் வராதோ , எப்படி PM CARE டிஜிட்டல் கமிஷன் அப்படி , ஒட்டு கட்சி எப்பவுமே இப்படித்தான்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
13-அக்-202112:02:17 IST Report Abuse
சீனி எல்லோரும் ஓரளவுக்கு சுரண்டினாலும், எடியூரப்பா மகன் பேராசை பிடித்தவன். அரசு சொத்தை ஆட்டைய போட்டு விற்பதில் அப்பனும் மகனும் கில்லாடிகள். அதனால் தான், தானே பிஜேபி என்று மார்தட்டி கொள்ளையடித்துவந்த எடி கும்பல் பி.ஜேபி காலியாக்கிவிடும் என்று அமித்சா கல்தா கொடுத்துவிட்டார். ரெய்டுக்கு நிர்மலாஜிக்கு பாராட்டுக்கள். தேர்தலுக்கு முன்பு 1500கோடி சபரிசன் வீட்டு ரெய்டுக்கும் ரிப்போர்ட் வந்தா நல்லாயிருக்கும், அண்ணாமலை இதை பத்தி நிர்மலாஜிகிட்ட பேசினா நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X