மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவி; தி.மு.க., வேட்பாளர் வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவி; தி.மு.க., வேட்பாளர் வெற்றி

Added : அக் 13, 2021
Share
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவி தேர்தலில், தி.மு.க., வேட்பாளர், 6,488 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஈரோடு மாவட்ட பஞ்.,ல், 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், 10வது வார்டில் வென்ற பா.ம.க., வேலுசாமி கொரோனாவால் இறந்தார். மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்தார்.இந்த இடத்துக்கு கடந்த, 9ல் நடந்து நேற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. இதில் தி.மு.க.,

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவி தேர்தலில், தி.மு.க., வேட்பாளர், 6,488 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஈரோடு மாவட்ட பஞ்.,ல், 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், 10வது வார்டில் வென்ற பா.ம.க., வேலுசாமி கொரோனாவால் இறந்தார். மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்தார்.இந்த இடத்துக்கு கடந்த, 9ல் நடந்து நேற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. இதில் தி.மு.க., வேட்பாளர், 18 ஆயிரத்து, 713 ஓட்டுகள் பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கராஜைவிட, 6,488 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

மொத்த ஓட்டு விபரம்: மொத்த ஓட்டுகள் - (51,459), பதிவானவை - (36,104).தி.மு.க., சதாசிவம் - (18,713), அ.தி.மு.க., தங்கராஜ் - (12,225), பா.ம.க., ராமசாமி - (3,652), நாம் தமிழர் மாரிமுத்து - (601), அ.ம.மு.க., முருகன் - (130), தே.மு.தி.க., நடராஜன் - (136), செல்லாதவை - (647) ஓட்டு வித்தியாசம் - (6,488).

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X