சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநகரில் கோர விபத்து; கணவன் கண்ணெதிரே மனைவி நசுங்கி பலி

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஈரோடு : ஈரோட்டில் கோர விபத்தில், கணவன் கண்ணெதிரே, மனைவி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், விட்லாபுரி, மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சுந்தரேசன், 59; இவரின் மனைவி மோகனா, 55; இருவரும் ஜவுளி வியாபாரிகள். ஒரு மகன், மகள் உள்ளனர். டி.வி.எஸ்., ப்ளசர் மொபட்டில், கணவன், மனைவி ஈரோட்டில் பார்க் சாலை பழைய ஸ்டார் தியேட்டர் அருகே நேற்று சென்றனர்.சென்னையில்

ஈரோடு : ஈரோட்டில் கோர விபத்தில், கணவன் கண்ணெதிரே, மனைவி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், விட்லாபுரி, மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சுந்தரேசன், 59; இவரின் மனைவி மோகனா, 55; இருவரும் ஜவுளி வியாபாரிகள். ஒரு மகன், மகள் உள்ளனர். டி.வி.எஸ்., ப்ளசர் மொபட்டில், கணவன், மனைவி ஈரோட்டில் பார்க் சாலை பழைய ஸ்டார் தியேட்டர் அருகே நேற்று சென்றனர்.

சென்னையில் இருந்து ஈரோடு வந்த, பாலமுருகன் லாரி சர்வீசின் டாரஸ் லாரி, பக்கவாட்டில் வந்த மொபட் மீது மோதியது. இருவரும் நிலைதடுமாறி விழ, டாரஸ் லாரி பின் சக்கரம் மோகனா தலை மீது ஏறி இறங்கியதில் பலியானார். கருங்கல்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் போக்குவரத்து பாதித்தது. லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த சங்கரை, 45, பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். டாரஸ் லாரியை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X