பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கயிறு வாரியம்; அமைக்க வலியுறுத்தல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஈரோடு : ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் தென்னை நார், பித் கட்டி உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பூச்சாமி தலைமையில், ஈரோட்டில் நடந்தது. தென்னை நார் சார்ந்த உற்பத்தி பொருட்கள் பல்வேறு காரணத்தால், பத்தாண்டுகளில் இல்லாத அளவு விலை குறைந்து, விற்பனையின்றி உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு

ஈரோடு : ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் தென்னை நார், பித் கட்டி உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பூச்சாமி தலைமையில், ஈரோட்டில் நடந்தது.

தென்னை நார் சார்ந்த உற்பத்தி பொருட்கள் பல்வேறு காரணத்தால், பத்தாண்டுகளில் இல்லாத அளவு விலை குறைந்து, விற்பனையின்றி உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தேங்காய் மட்டைகள் வாங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும்.

தென்னை நார் மொத்த உற்பத்தியில், 80 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது நார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே தொழிலை காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டிலேயே தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி கூட்டு குழுமங்களை உருவாக்க வேண்டும். கேரளா, கர்நாடகா போல, தமிழகத்தில் மாநில கயிறு வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X