பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு யூனியன் தி.மு.க., வசம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஈரோடு : ஈரோடு யூனியனில், ஆறு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 2019ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,- 3, அ.தி.மு.க., - 3 கவுன்சிலர் பதவியை வென்றனர். தலைவர், துணை தலைவர் தேர்தலுக்கு மூன்று முறை வாய்ப்பளித்தபோதும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்காததால், தேர்தல் ரத்தானது. அதற்குள் கொரோனா உட்பட பல காரணத்தால் தேர்தல் நடக்கவில்லை. இதற்கிடையில், அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் இறந்ததால் வார்டு

ஈரோடு : ஈரோடு யூனியனில், ஆறு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 2019ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,- 3, அ.தி.மு.க., - 3 கவுன்சிலர் பதவியை வென்றனர். தலைவர், துணை தலைவர் தேர்தலுக்கு மூன்று முறை வாய்ப்பளித்தபோதும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்காததால், தேர்தல் ரத்தானது. அதற்குள் கொரோனா உட்பட பல காரணத்தால் தேர்தல் நடக்கவில்லை. இதற்கிடையில், அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் இறந்ததால் வார்டு எண்-4க்கு தேர்தல் அறிவித்து, நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

இதில் தி.மு.க., விவேகானந்தன் - 3,405 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வின் ஜெகதீசன் - 1,352 ஓட்டு பெற்றார். இதனால் ஈரோடு யூனியனில் ஆறு கவுன்சிலரில் நான்கு இடங்களை வென்ற தி.மு.க., யூனியன் தலைவர், துணை தலைவர் பதவியை வசப்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X