பொது செய்தி

தமிழ்நாடு

மறு ஓட்டு எண்ணிக்கை கேட்டு தி.மு.க.,வினர் போராட்டம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோபி : நம்பியூர் யூனியன், கூடக்கரை பஞ்., தலைவர் பதவிக்கு, தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில், சண்முகசுந்தரம், அ.தி.மு.க., சார்பில் சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். நம்பியூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பதிவான, 2,666 ஓட்டுகளில், அ.தி.மு.க.,வின் சிவக்குமார் 1,308 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம், 1,284 ஓட்டு பெற்றார். வெற்றி

கோபி : நம்பியூர் யூனியன், கூடக்கரை பஞ்., தலைவர் பதவிக்கு, தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில், சண்முகசுந்தரம், அ.தி.மு.க., சார்பில் சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். நம்பியூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பதிவான, 2,666 ஓட்டுகளில், அ.தி.மு.க.,வின் சிவக்குமார் 1,308 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம், 1,284 ஓட்டு பெற்றார். வெற்றி வித்தியாசம், ௨௪ ஆக இருந்த நிலையில், செல்லாத ஓட்டுகள், ௪௩ இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த, தி.மு.க., கூட்டணி கட்சியினர், மறு ஓட்டு எண்ணிக்கை கேட்டு, யூனியன் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம், மறு ஓட்டு எண்ணிக்கை கேட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமலதா கூறுகையில், 'தேர்தல் முடிவை அறிவித்த பின், மறு ஓட்டு எண்ணிக்கை செய்ய இயலாது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X