சிலைகளை இடித்ததால் கோபி அருகே பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலைகளை இடித்ததால் கோபி அருகே பரபரப்பு

Added : அக் 13, 2021
Share
கோபி : கோபி அருகே கோவில் சிலைகளை, இடித்து தரைமட்டமாக்கியதால், இரு தரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.கோபி, அளுக்குளி அருகே அம்பேத்கார் நகர் காலனியில், தனியாருக்கு சொந்தமான பாலமரத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த இடம், தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி, தனி நபர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரத்துடன் சென்றார். கோவிலில் உள்ள, 20 அடி உயர

கோபி : கோபி அருகே கோவில் சிலைகளை, இடித்து தரைமட்டமாக்கியதால், இரு தரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோபி, அளுக்குளி அருகே அம்பேத்கார் நகர் காலனியில், தனியாருக்கு சொந்தமான பாலமரத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த இடம், தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி, தனி நபர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரத்துடன் சென்றார். கோவிலில் உள்ள, 20 அடி உயர முனியப்பன் சிலை, இரண்டடி உயர கருப்பராயன் சிலை மற்றும் ஒரு சிறிய அறையை இடித்து தரைமட்டமாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த எம்.ஜி.ஆர்., நகர், அம்பேத்கர் நகர், கோபிபாளையம் பகுதி மக்கள், கோவில் பகுதியில் நேற்று குவிந்தனர்.

கடத்துார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, இரு தரப்பினரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதால் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகார் யாரும் தராததால், வழக்கு பதியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X