பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் தேங்கிய பகுதிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி, 32வது வார்டு வெட்டுக்காட்டுவலசு, நல்லிதோட்டம் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி அமைந்துள்ள பகுதியில், மழை நீர் தேங்கிய இடங்களை, கிழக்கு எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, நேற்று ஆய்வு செய்தார்.முறையான வடிகால் வசதி இல்லாததால், சாக்கடை நீர், மழை நீர், சாயக்கழிவு நீர் ஆங்காங்கு தேங்கி, கொசு, புழுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.இதை ஆய்வு

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி, 32வது வார்டு வெட்டுக்காட்டுவலசு, நல்லிதோட்டம் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி அமைந்துள்ள பகுதியில், மழை நீர் தேங்கிய இடங்களை, கிழக்கு எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, நேற்று ஆய்வு செய்தார்.

முறையான வடிகால் வசதி இல்லாததால், சாக்கடை நீர், மழை நீர், சாயக்கழிவு நீர் ஆங்காங்கு தேங்கி, கொசு, புழுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.இதை ஆய்வு செய்த எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, தண்ணீர் தேங்கிய பகுதி வழியாக நடந்து சென்று, பாதிப்புகளை பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அந்நீரை வடிய செய்து, மீண்டும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்.நிரந்தர தீர்வாக சாக்கடை அமைத்து தர கேட்டு கொண்டார். அப்பகுதியில் முற்றிலும் பழுதான தெருவிளக்குகளை அகற்றிவிட்டு, தரமான விளக்குகள் அமைத்து கொடுக்க யோசனை தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X