பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளூர் வர்த்தக செய்திகள்

Added : அக் 13, 2021
Share
Advertisement
தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.௧௦௨எழுமாத்துார்: ஈரோடு மாவட்டம், எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், ௧,321 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 98.39 ரூபாய் முதல், 102.30 ரூபாய், இரண்டாம் தரம், 63.15 ரூபாய் முதல், 93.89 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 62 ஆயிரத்து, 294 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு, 59 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய்க்கு

தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.௧௦௨

எழுமாத்துார்: ஈரோடு மாவட்டம், எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், ௧,321 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 98.39 ரூபாய் முதல், 102.30 ரூபாய், இரண்டாம் தரம், 63.15 ரூபாய் முதல், 93.89 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 62 ஆயிரத்து, 294 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு, 59 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

பருத்தி ஏலத்துக்கு ௭௩௬ மூட்டை வரத்து

அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வேளாண் விளை பொருட்கள் ஏலம் நேற்று நடந்தது. தேங்காய், 7,௦௦௦ காய்கள் வரத்தாகி, ஒரு காய், 6.51 - 19.20 ரூபாய்; தேங்காய் பருப்பு, 36 மூட்டைகள் வரத்தாகி, கிலோ, 87.69 - 96.66 ரூபாய்; மக்காச்சோளம், 80 மூட்டை வரத்தாகி, கிலோ, 10-17.50 ரூபாய்; எள் இரண்டு மூட்டை வரத்தாகி, கிலோ, 89.89 ரூபாய்க்கு விற்றது. பருத்தி, 736 மூட்டை வரத்தாகி, கிலோ, 72.09 - 77.09 ரூபாய்க்கு விலை போனது. அனைத்தும், 18.73 லட்சத்துக்கு விற்பனையானது.

சம்பங்கி பூ விலை எகிறியதால் மகிழ்ச்சி

சத்தியமங்கலம்: முகூர்த்தம், விசேஷ நாட்கள் இல்லாததால், சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட்டில், சம்பங்கி பூ கிலோ, 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. இந்நிலையில் ஆயுதபூஜையால் நேற்று விலை எகிறியது. ஒரு கிலோ, 220 ரூபாய்க்கு விலை போனது. இதனால் சம்பங்கி பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை, 850 ரூபாய், 220க்கு விற்ற முல்லை, 580 ரூபாய், கோழிக்கொண்டை, 115 ரூபாய், கனகாம்பரம், 400 ரூபாய்க்கும் விற்றது.

ரூ.88 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம்

கோபி: சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நடந்தது. தென்னங்கருப்பட்டி, 1,100 கிலோ வரத்தாகி, கிலோ, 80 ரூபாய் என, அனைத்தும், 88 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

ரூ.2.38 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

கொடுமுடி: கொடுமுடியை அடுத்த சாலைபுதுார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 106 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 62.20 ரூபாய் முதல், 68.70 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம் இரண்டு லட்சத்து, 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

ரூ.3.55 லட்சத்துக்கு வெப்பிலியில் ஏலம்

சென்னிமலை: சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 12 ஆயிரத்து, 267 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 28 ரூபாய் முதல், 31.79 ரூபாய் வரை விலை போனது. இதேபோல் தேங்காய்பருப்பு ஏலத்துக்கு, 45 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 82.10 ரூபாய் முதல், 99.50 ரூபாய் வரை ஏலம் போனது. தேங்காய், தேங்காய் பருப்பு இரண்டும் சேர்ந்து, 3.55 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் லட்சுமணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X