பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியை தத்தெடுக்கும் விழா

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஓசூர் : ஓசூர் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியை, ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம், அறம் இலக்கிய அமைப்பு ஆகியவை இணைத்து தத்தெடுத்துள்ளன. இதன் துவக்க விழா மற்றும் பள்ளி நுழைவாயிலில் கான்கிரீட் துாண்கள் அமைக்க பூமிபூஜை நேற்று நடந்தது. சங்க தலைவர் அறம் கிருஷ்ணன், ரோட்டரி நியமன ஆளுனர் ராகவன் ஆகியோர்

ஓசூர் : ஓசூர் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியை, ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம், அறம் இலக்கிய அமைப்பு ஆகியவை இணைத்து தத்தெடுத்துள்ளன.

இதன் துவக்க விழா மற்றும் பள்ளி நுழைவாயிலில் கான்கிரீட் துாண்கள் அமைக்க பூமிபூஜை நேற்று நடந்தது. சங்க தலைவர் அறம் கிருஷ்ணன், ரோட்டரி நியமன ஆளுனர் ராகவன் ஆகியோர் தலைமை வகித்து, பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். முன்னதாக, பள்ளிக்கு தேவையான, பீரோ, மைக்செட் போன்றவை, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கி கொடுக்கப்பட்டன. அதேபோல், தலா, 2,500 ரூபாய் மதிப்புள்ள சங்கத்தமிழ் நுால்கள் மற்றும் ஆங்கில நுால்கள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் மூலிகை தோட்டம் மற்றும் குறுங்காடுகள் வளர்த்தல், மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு கவியரங்கம், பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X