அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

Added : அக் 13, 2021
Share
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், ஒவ்வொரு மாதமும் பல்வேறு போட்டிகள் நடக்கிறது. அதன்படி இம்மாதம், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை போட்டி நடக்கிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கல்லுாரி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், ஒவ்வொரு மாதமும் பல்வேறு போட்டிகள் நடக்கிறது. அதன்படி இம்மாதம், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை போட்டி நடக்கிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம். இதில், 'காந்தியடிகளும் தமிழகமும்' என்ற தலைப்பில் தமிழில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் யுனிகோடில் தட்டச்சு செய்து, 94434 42991 என்ற, 'வாட்ஸ்ஆப்' எண்ணிற்கு வரும், 22ல் மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட அரசு அருங்காட்சியகம், காந்தி சாலை, கிருஷ்ணகிரி, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெற்றிபெறும் மூவருக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X