கே.ஆர்.பி., அணையில் குரங்குகள் அட்டகாசம்| Dinamalar

கே.ஆர்.பி., அணையில் குரங்குகள் அட்டகாசம்

Added : அக் 13, 2021
Share
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு, மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் ஒரே பொழுது போக்கும் அம்சமாக உள்ள கே.ஆர்.பி., அணைக்கு தற்போது அதிகளவில் மக்கள் வருகின்றனர். இவர்கள் அணையை சுற்றி பார்த்துவிட்டு பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவில் பொழுதை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு, மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் ஒரே பொழுது போக்கும் அம்சமாக உள்ள கே.ஆர்.பி., அணைக்கு தற்போது அதிகளவில் மக்கள் வருகின்றனர். இவர்கள் அணையை சுற்றி பார்த்துவிட்டு பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவில் பொழுதை கழிக்கின்றனர்.

கே.ஆர்.பி., அணையில் தற்போது, 100க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை சுற்றுலா பயணிகள் நிறுத்திவிட்டுச் செல்லும் கார் மற்றும் டூவீலரிலுள்ள துணிகள், உணவு பண்டங்கள், பால் பாட்டில்கள் ஆகியவற்றை வெளியே வீசியும், சேதப்படுத்தியும் வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கே.ஆர்.பி., அணையிலுள்ள குரங்குகளை வனத்துறையினர் பிடித்து, காப்புக்காட்டில் விட கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X