பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : அக் 13, 2021
Share
Advertisement
கல்லுாரியில் ரத்த தான முகாம்ஊத்தங்கரை: ஊத்தங்கரை, அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், தேசிய தன்னார்வ ரத்த தான தினம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி, நேசம் தொண்டு நிறுவனம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய, 60வது ரத்ததான முகாம் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்.,

கல்லுாரியில் ரத்த தான முகாம்ஊத்தங்கரை: ஊத்தங்கரை, அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், தேசிய தன்னார்வ ரத்த தான தினம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி, நேசம் தொண்டு நிறுவனம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய, 60வது ரத்ததான முகாம் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்., எம்.பி., செல்லக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். இதில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் தேவராசு உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், 41, யூனிட் ரத்தம் நன்கொடையாக பெறப்பட்டது.
நகை பறித்த வாலிபர் சிக்கினார்ஓசூர்: ஓசூர் காந்தி நகரை சேர்ந்த நாகராஜ் மனைவி ஷோபா, 35. தனியார் பள்ளியில் படிக்கும் தன் மகளை அழைத்து வர கடந்த, 6ல் மதியம், 3:30 மணிக்கு சென்றார். பள்ளி முன் காத்திருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர் அவரது கழுத்திலிருந்த ஆறு பவுன் தாலியை பறித்து சென்றார். அவரது புகாரின்படி, டவுன் போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமராவை சோதனை செய்தபோது, பேரிகை காமராஜ் நகரை சேர்ந்த நாகராஜ், 36, என்பவர், நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடமிருந்து, ஆறு பவுன் தங்க தாலி மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.
நவராத்திரி கொலு வழிபாடுஅரூர்: அரூர், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி, கோவிலில் கொலு அமைத்து பூஜை நடந்து வருகிறது. ஏழாம்- நாளான நேற்று, அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
லாட்டரி விற்ற இருவர் கைதுபோச்சம்பள்ளி: போச்சம்பள்ளி சந்தை வளாகத்தில், தடை செய்த லாட்டரி சீட்டு விற்ற, திப்பம்பட்டியை சேர்ந்த பச்சியப்பன், 40, மகாதேவகொல்லஹள்ளியை சேர்ந்த ஹரிஹரன், 22, ஆகியோரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 14 லாட்டரி சீட்டு, 450 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
எம்.எல்.ஏ.,விடம் மக்கள் மனுஓசூர்: ஓசூர் உழவர்சந்தை அருகே உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில், தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை செய்து கொடுக்கக்கேட்டு, பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக, பொதுமக்களிடம் உறுதியளித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
உலக பெண் குழந்தைகள் தினம்ஓசூர்: ஓசூர் சிட்கோ தொழிற்பேட்டையில், ஓசூர் சிப்காட் ரோட்டரி சங்கம் சார்பில், இலவச சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. அப்போது, உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஆணுக்கு, பெண் சமம் என்பதை விளக்கும் வகையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒன்னல்வாடியிலுள்ள தனியார் பள்ளியில், உலக பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு, மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சங்க தலைவர் சுப்பாராவ் செய்திருந்தார்.
விபத்தில் வாலிபர் பலிஅரூர்: அரூர் அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் வேலு, 45, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 10ல் இரவு, 9:00 மணிக்கு, அன்னை அஞ்சுகம் நகரிலுள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அரூர்-சிந்தல்பாடி சாலையில், எதிரே வந்த ஹீரோ ஹோண்டா ஷைன் பைக் அவர் மீது மோதியது. இதில், வேலு மற்றும் பைக்கை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், 28, ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, ஸ்டீபன்ராஜ் உயிரிழந்தார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பா.ம.க.,-எம்.எல்.ஏ., ஆய்வுதர்மபுரி: தர்மபுரி, பா.ம.க.,-எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டிலுள்ள குடிநீர் குழாய்கள் தண்ணீர் வருகிறதா, கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ஜவுளிக்கடைகள், ஓட்டல், டீக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கிறதா என ஆய்வு செய்தார்.
பள்ளி மாணவர் மாயம்கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்தவர், 15 வயது மாணவர். வேப்பனஹள்ளி அருகே பன்னப்பள்ளியிலுள்ள பள்ளி விடுதியில் தங்கி, 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10ல், பள்ளி விடுதியில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகி தாஜிதாமஸ் புகார்படி, வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X