தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருந்த, 13 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த, 9ல் நடந்தது. நேற்று ஓட்டுச்சீட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.பர்கூர் ஒன்றிய, 30வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் மொத்தமாக 5,573 ஓட்டுகள் பதிவானது. இதில், தி.மு.க., வேட்பாளர் எல்லப்பன், 3,252 ஓட்டுக்களும், அ.தி.மு.க., வேட்பாளர் முகுந்தன், 1,736 ஓட்டுக்களும், பா.ம.க., வேட்பாளர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருந்த, 13 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த, 9ல் நடந்தது. நேற்று ஓட்டுச்சீட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பர்கூர் ஒன்றிய, 30வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் மொத்தமாக 5,573 ஓட்டுகள் பதிவானது. இதில், தி.மு.க., வேட்பாளர் எல்லப்பன், 3,252 ஓட்டுக்களும், அ.தி.மு.க., வேட்பாளர் முகுந்தன், 1,736 ஓட்டுக்களும், பா.ம.க., வேட்பாளர் வேலாயுதம், 404 ஓட்டுக்களும், சுயேச்சைகள் விநாயக மூர்த்தி, 12, வெங்கடேசன், 89 ஓட்டுக்களும் பெற்றனர். தி.மு.க., வேட்பாளர் எல்லப்பன், 1,516 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிச்சான்றிதழை வழங்கினார். அப்போது பர்கூர் தி.மு.க.,-எம்.எல்.ஏ., மதியழகன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராசன், சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேப்பனஹள்ளி ஒன்றியம் எண்ணேகொள்ளு பஞ்., வார்டு 9ல் தானப்பன், பாலனப்பள்ளி பஞ்., வார்டு, 2ல் சந்தோஷ்குமார், கிருஷ்ணகிரி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி வார்டு, 11ல், டாக்டர். சுபத்ரை, ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி பஞ்.,1ல் கீதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.* ஓசூர், கெலமங்கலம், தளி ஒன்றியங்களில் காலியாக இருந்த பஞ்., தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நடந்தது.

நல்லுார் பஞ்.,ல், 6008 பேர் ஓட்டளித்தனர். இதில், தி.மு.க., ஆதரவு வேட்பாளர் சாந்தா, 3,464 ஓட்டுகளும், அ.தி.மு.க., ஆதரவு வேட்பாளர் சந்தியா, 2,431 ஓட்டுகளும் பெற்றனர். இதில், 1,033 ஓட்டுகள் வித்தியாசத்தில் சாந்தா வெற்றி பெற்றார். அவருக்கு, பி.டி.ஓ., ராமச்சந்திரன், சான்றிதழை வழங்கினார். அதை, தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து, வேட்பாளர் சாந்தா பெற்று கொண்டார். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல், கெலமங்கலம் ஒன்றியம், கண்டகானப்பள்ளி பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பார்வதி, 887 ஓட்டுகளும், ஆனந்தா, 517 ஓட்டுகளும் பெற்றனர். இதில், 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் பார்வதி வெற்றி பெற்றார்.

தளி ஒன்றியம் பின்னமங்கலம் பஞ்.,ல், நவீன், 996 ஓட்டுகளும், சரசம்மா 776, ஓட்டுகள் பெற்றனர். இதில், 220 ஓட்டுகள் வித்தியாசத்தில் நவீன் வெற்றி பெற்றார்.

ஓசூர் ஒன்றியம், தும்மனப்பள்ளி பஞ்., 6 வார்டில் ராஜப்பா, அச்செட்டிப்பள்ளி பஞ்., 2வது வார்டில் கோபால், கெலமங்கலம் ஒன்றியம், குந்துமாரனப்பள்ளி பஞ்., 2வது வார்டில் சுமா, பெட்டமுகிலாளம் பஞ்., 11வது வார்டில் மீனா, கண்ட கானப்பள்ளி பஞ்., 2வது வார்டில் மீனாட்சியம்மா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X