பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் படைவீரர்களின் மாணவர்களுக்கு உதவித்தொகை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஒரு லட்ச ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்க, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, தமிழ்நாடு பொது நிர்வாகம் மற்றும் அதிகாரப்பூர்வ அறக்கட்டளையால்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஒரு லட்ச ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்க, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, தமிழ்நாடு பொது நிர்வாகம் மற்றும் அதிகாரப்பூர்வ அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், குடும்பத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மாணவர்கள், கட்டாயமாக கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று, 80 சதவீத மதிப்பெண்ணும், தொழில்முறை படிப்புகளான பி.இ., பி.எல்., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி., (அக்ரி) போன்ற படிப்புகளில் நடப்பு முதலாமாண்டில், 50 சதவீத மதிப்பெண்ணும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விபரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது, 04343 236134 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X