சம்பவம் செய்தி

தமிழ்நாடு

16 மூட்டை குட்கா பறிமுதல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஓசூர் : ஓசூரிலிருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் கார், சூளகிரி அருகே ரோந்து போலீசாரை கண்டவுடன் வேகமாக சென்றுள்ளது. சந்தேகமடைந்த போலீசார் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நின்ற போலீசாரை பார்த்ததும், காரை ஓட்டி வந்தவர் மீண்டும் ஓசூர் நோக்கிச் சென்றார். இதனால் மீண்டும் சூளகிரி போலீசாருக்கு தகவல்

ஓசூர் : ஓசூரிலிருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் கார், சூளகிரி அருகே ரோந்து போலீசாரை கண்டவுடன் வேகமாக சென்றுள்ளது. சந்தேகமடைந்த போலீசார் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நின்ற போலீசாரை பார்த்ததும், காரை ஓட்டி வந்தவர் மீண்டும் ஓசூர் நோக்கிச் சென்றார். இதனால் மீண்டும் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சூளகிரி அருகே, அக்காரை நிறுத்த முயன்ற போது, போலீசார் மீது மோதிவிடுவது போல் நிற்காமல் சென்று விட்டது. இதனால் ஹட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் காரை நிறுத்த முயன்றபோது, அதற்குள் கார் டயர் பஞ்சராகி நின்றது. போலீசார் காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டுவை சேர்ந்த அருணாச்சலம், 24, என தெரிந்தது. அவர் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு, 16 மூட்டைகளில், 94 ஆயிரத்து, 400 ரூபாய் மதிப்புள்ள, 112 கிலோ குட்காவை கடத்திச் சென்றது தெரிந்தது. ஹட்கோ போலீசார் அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X