சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டட மேஸ்திரி கழுத்தை அறுத்து கொலை; போலீசில் மனைவி சரண்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : பர்கூரில், கணவர் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி, போலீசில் சரணடைந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மாதேஷ், 42, கட்டட மேஸ்திரி; இவரது மனைவி மலர், 37. இவர்களுக்கு ரத்தினவேல் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். சத்யாவுக்கு அவரது அத்தை மகனுடன் திருமணமானது. கடந்த, இரு நாட்களுக்கு முன் குடும்ப பிரச்னையால் சத்யா, தன் தாய் வீட்டிற்கு வந்து

கிருஷ்ணகிரி : பர்கூரில், கணவர் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி, போலீசில் சரணடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மாதேஷ், 42, கட்டட மேஸ்திரி; இவரது மனைவி மலர், 37. இவர்களுக்கு ரத்தினவேல் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். சத்யாவுக்கு அவரது அத்தை மகனுடன் திருமணமானது. கடந்த, இரு நாட்களுக்கு முன் குடும்ப பிரச்னையால் சத்யா, தன் தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். கணவர் வீட்டிலிருந்து வந்த மகளால், நேற்று முன்தினம் இரவு ஆத்திரத்தில் மனைவி, மகளுடன் மாதேஷ் தகராறு செய்துள்ளார். 'காலையில் கணவர் வீட்டிற்கு நீ செல்ல வேண்டும்' என மகளிடம் கூறியவர், மனைவியையும் மிரட்டியுள்ளார்.

இதனால், கணவர் மீது கோபத்தில் இருந்த மலர், இரவில் துாங்கி கொண்டிருந்த கணவர் மாதேஷின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின், பர்கூர் போலீசில் சரணடைந்தார். போலீசார் சம்பவ இடம் சென்று மாதேஷின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X