சவர தொழிலாளர் சங்க நிர்வாகிகள்; தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சவர தொழிலாளர் சங்க நிர்வாகிகள்; தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

Added : அக் 13, 2021
Share
கிருஷ்ணகிரி : தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்க, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்கத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் வேட்புமனு தாக்கல், நேற்று கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி : தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்க, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்கத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் வேட்புமனு தாக்கல், நேற்று கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் மண்டபத்தில் நடந்தது. மாநில பொருளாளர் ராஜா தலைமை வகித்தார். தனபால், முருகேசன், பாண்டுரங்கன், ராஜேந்திரன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேர்தல் ஆணையளராக நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் திருப்பூர்.செல்வராஜிடம், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடராஜன் உட்பட ஏராளமான உறுப்பினர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு வரும், 22ல் தேர்தல் நடக்கவுள்ளது. அன்றைய தினமே, கிருஷ்ணகிரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X