பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : அக் 13, 2021
Share
Advertisement
மழையால் அழுகிய சாம்பல் பூசணி-பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாம்பல்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இவை ஓசூர், கர்நாடகா, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பருவ மழையால், சாம்பல் பூசணி நல்ல விளைச்சல் கண்டுள்ளது.இந்நிலையில், கடத்துார், சிந்தல்பாடி, தொங்கனுார்,

மழையால் அழுகிய சாம்பல் பூசணி-பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாம்பல்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இவை ஓசூர், கர்நாடகா, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பருவ மழையால், சாம்பல் பூசணி நல்ல விளைச்சல் கண்டுள்ளது.இந்நிலையில், கடத்துார், சிந்தல்பாடி, தொங்கனுார், பொம்மிடி, பி.துறிஞ்சிபட்டி, பையர்நத்தம், பில்பருத்தி, கேத்துரெட்டிபட்டி, வேப்பிலைபட்டியில், தொடர் மழையால் அறுவடை செய்யாமல், விவசாய நிலங்களில் சாம்பல் பூசணி அழுகி, கால்நடைகளுக்கு தீவனமாகி வருகிறது. இதனால், இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இருமத்துாரில் வெள்ளப்பெருக்குகம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த இருமத்துார் தென்பெண்ணையாற்றில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டூவீலர் மோதி முதியவர் பலிஓசூர்: சூளகிரி அடுத்த மேலுமலையை சேர்ந்தவர் சென்னப்பா, 60. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, மேலுமலை பஸ் நிறுத்தம் அருகே, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அவ்வழியாக வந்த டூவீலர் மோதி படுகாய மடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். டூவீலரை ஓட்டி வந்த வாலிபரை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
காகித படகு விடும் போராட்டம்ஒகேனக்கல்: கிடப்பில் போடப்பட்டுள்ள பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, பஸ் ஸ்டாண்டில் தோண்டப்பட்ட குழியில், நேற்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் படகு விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சங்க நகர தலைவர் சபரிராஜன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
தலையில்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டிகிருஷ்ணகிரி: சூளகிரி அடுத்த கங்கசந்திரத்தை சேர்ந்தவர் சந்திரப்பா, 60, விவசாயி. இவர், 20 ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு நேற்று முன்தினம் ஒரு தலையில்லாத ஆட்டுக்குட்டியை ஈன்றது. பிறந்து சில நிமிடங்களிலேயே மூச்சுத்திணறி இறந்தது. தலையில்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி செய்தி, அக்கம் பக்கத்தில் பரவ, அக்கம் பக்கத்தினர் பலர் அதிசய ஆட்டுக்குட்டியை பார்த்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X