பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்காடு செல்ல கனரக வாகனங்களுக்கு தடை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சேலம் : மழையால், பாதுகாப்பு நடவடிக்கையாக, ஏற்காடு செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொடர் மழையால், மண்ணின் இறுகிய தன்மை இலகுவாகி, நேற்று முன்தினம் இரவில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர், உடனே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக, போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு, அனைத்து

சேலம் : மழையால், பாதுகாப்பு நடவடிக்கையாக, ஏற்காடு செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொடர் மழையால், மண்ணின் இறுகிய தன்மை இலகுவாகி, நேற்று முன்தினம் இரவில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர், உடனே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக, போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும், குப்பனுார் வழியாக திருப்பி விடப்பட்டன.

நிலச்சரிவு பகுதி, சீரமைப்பு பணியை கலெக்டர் கார்மேகம், நேற்று ஆய்வு செய்த பின் கூறியதாவது: மலைப்பாதை, 2, 3ம் கொண்டை ஊசி வளைவுக்கு இடைப்பட்ட பகுதியில், செங்குத்தாக, 30 அடி ஆழம், இடைமட்டத்தில், 15 அடி அகலத்துக்கு ஏற்பட்ட மண் சரிவால், பயன்படுத்த முடியாத அளவு விரிசல் உண்டாகி, பாதை முழுமையாக அடைபட்டு விட்டது. இதை சீரமைக்க, அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை குழுவினர், அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீராகும் வரை, கனரக வாகனங்கள் ஏற்காடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், குப்பனுார் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தொடர் மழையால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், கவனத்துடன் செல்ல வேண்டும். இரவு, 7:00 முதல், காலை, 6:00 மணி வரை, இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதியில்லை. இதற்கு, மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X