பொது செய்தி

இந்தியா

'பி.எம்., கேர்ஸ்' இணையதளத்தில் பிரதமர் புகைப்படத்தை நீக்க மனு; மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
மும்பை : 'பி.எம்., கேர்ஸ்' நிதி அறக்கட்டளை இணையதளத்தில் பிரதமர் பெயர், புகைப்படம், தேசிய கொடி, தேசிய சின்னங்களின் வடிவங்களை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விக்ரந்த் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த

மும்பை : 'பி.எம்., கேர்ஸ்' நிதி அறக்கட்டளை இணையதளத்தில் பிரதமர் பெயர், புகைப்படம், தேசிய கொடி, தேசிய சின்னங்களின் வடிவங்களை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



latest tamil news



மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விக்ரந்த் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று பரவலின்போது, சுகாதார அவசர தேவைகளுக்காகவும், பொது மக்களின் மருத்துவ நல திட்டங்களுக்காகவும் 'பி.எம்., கேர்ஸ்' நிதி என்ற அறக்கட்டளையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார்.

பி.எம்., கேர்ஸ் நிதி அரசாங்கத்தின் நிதி அல்ல. தாமாக முன்வந்து அளிக்கும் தனிநபர், நிறுவனங்கள் நன்கொடையை மட்டுமே பி.எம்., கேர்ஸ் நிதி பெறுகிறது. நன்கொடை அளிக்கப்படும் தொகைக்கு, 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கும், இதற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என மத்திய அரசே தெரிவித்துள்ளது.

அப்படியிருக்கையில் பி.எம்., கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் இணையதளத்தில் பிரதமர் பெயர், அவரது படம், தேசிய கொடி, தேசிய சின்னம் ஆகியவற்றின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளது, அரசியல் சட்டத்தை மீறிய செயல்.அதனால் இணையதளத்தில் இருந்து பிரதமரின் பெயர், படம், தேசிய கொடி, சின்னம் ஆகியவற்றின் வடிவங்கள் ஆகியவற்றை நீக்க உடனடியாக உத்தரவிட வேண்டும்.


latest tamil news


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சயீத், திகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-அக்-202102:46:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாம்பே சட்னியில் பாம்பே இருக்கா? இல்லை. சட்னி மட்டும் தான் இருக்கு மைசூர் போண்டாலே மைசூர் இருக்கா? இல்லை. போண்டா மட்டும் தான் இருக்கு ஆனா பிஎம் கேர்ஸ் லே, பிஎம் மும் கெடையாது, கேர்ஸ் சும் கெடையாது.. கணக்கும் கெடையாது..
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-அக்-202114:52:12 IST Report Abuse
ஜெயந்தன் நியாயமான கேள்வி...ஆனால்...
Rate this:
Cancel
Devan - Chennai,இந்தியா
13-அக்-202113:26:39 IST Report Abuse
Devan +எதற்காக நீக்க வேண்டும் .மோடிஜி தான் இன்றைய பிரதமர் .நம் நாட்டின் தேசியசின்னங்கள் நம் இந்திய பிரதமர் என்பதை தெரிவிக்கிறது .இதில் என்ன தவறு .நீக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X