சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி; சத்தியமங்கலம் அருகே சோகம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே, தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி, தந்தை மற்றும் மகன் உயிரை பறித்தது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள சிவியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 50; விவசாயியான இவருக்கு அதே பகுதியில், நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார். தினமும் அதிகாலையில், பூ பறிக்க தோட்டத்துக்கு செல்வார். நேற்று காலை

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே, தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி, தந்தை மற்றும் மகன் உயிரை பறித்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள சிவியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 50; விவசாயியான இவருக்கு அதே பகுதியில், நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார். தினமும் அதிகாலையில், பூ பறிக்க தோட்டத்துக்கு செல்வார். நேற்று காலை வழக்கம் போல் சென்றவர், தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

தந்தை வீடு திரும்பாததால், மகன் கவின் பிரகாஷ், 24, தோட்டத்துக்கு சென்றார். தந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரணம் தெரியாமல் உடலை மீட்க முயன்ற அவரும், மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதன் பிறகே மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சத்தி போலீசார் உடல்களை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியானது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X