பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பா.ஜ.,ஒருபோதும் காலூன்ற முடியாது; முத்தரசன்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : ''தமிழ்நாட்டில் ஒரு போதும், பா.ஜ., காலுான்ற முடியாது,'' என, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.கிருஷ்ணகிரியில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முத்தரசன் முன்னிலையில், இ.கம்யூ., கட்சியில் இணைந்தனர். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: உத்தரபிரதேச சம்பவத்தில், சுப்ரீம் கோர்ட்டின் மிக கடுமையான நடவடிக்கைக்கு பின், மத்திய உள்துறை இணை

கிருஷ்ணகிரி : ''தமிழ்நாட்டில் ஒரு போதும், பா.ஜ., காலுான்ற முடியாது,'' என, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

கிருஷ்ணகிரியில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முத்தரசன் முன்னிலையில், இ.கம்யூ., கட்சியில் இணைந்தனர். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: உத்தரபிரதேச சம்பவத்தில், சுப்ரீம் கோர்ட்டின் மிக கடுமையான நடவடிக்கைக்கு பின், மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டார். ஒன்பது நாட்கள் கடந்தும், இச்சம்பவத்துக்கு பிரதமர் கண்டனமோ, பலியானோரின் குடும்பத்துக்கு ஆறுதலோ கூறவில்லை. இதற்கு பொறுப்பேற்று உள்துறை இணை அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் அவரை நீக்க வேண்டும்.

மூன்று வேளாண் சட்டங்கள், மின்திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் தீவிரமடையும். மத்திய அரசின் தவறான வழிகாட்டுதலால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. தமிழக அரசு, பெட்ரோல் விலையை, மூன்று ரூபாய் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் மத்திய அரசு ஒரு பைசா கூட குறைக்காதது வருத்தம் அளிக்கிறது. சமையல் காஸ் விலையை குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில், பா.ஜ., வளர்ந்து விட்டதாக ஒருவித மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு போதும், பா.ஜ., காலுான்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X