பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவிலிருந்து 70 யானைகள் இடம்பெயர்வு ஜவளகிரி வனப்பகுதியில் இரு குழுவாக முகாம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஓசூர் : கர்நாடகாவிலிருந்து இடம் பெயர்ந்த யானைகள் கூட்டம், தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்., அல்லது அக்.,ல் இடம் பெயரும், 100க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வழியாக, ஓசூர் வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான இடம்பெயர்வு கடந்த

ஓசூர் : கர்நாடகாவிலிருந்து இடம் பெயர்ந்த யானைகள் கூட்டம், தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்., அல்லது அக்.,ல் இடம் பெயரும், 100க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வழியாக, ஓசூர் வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான இடம்பெயர்வு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. கர்நாடகாவிலிருந்து இடம் பெயர்ந்த, 70க்கும் மேற்பட்ட யானைகள், ஜவளகிரி வனச்சரகத்தில் தற்போது தஞ்சமடைந்தன.

இதில், ஜவளகிரி காப்புக்காட்டிலுள்ள சந்திரன் ஏரி அருகே, 35க்கும் மேற்பட்ட யானைகளும், பாளையம் வனப்பகுதியில், 35 யானைகளும் முகாமிட்டுள்ளன. அவற்றை, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட, 25 பேர் அடங்கிய குழுவினர் கண்காணித்து வருகின்றனர். வனத்தையொட்டிய கிராமங்களில் ராகி பயிர் அதிகளவில் சாகுபடி செய்துள்ளதால், யானைகளால் அவை சேதமாக அதிக வாய்ப்புள்ளது.

அதனால், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு யானைகளை இடம் பெயர விடாமல், மீண்டும் கர்நாடகாவுக்கு விரட்டும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X