பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோராக விவசாயிகள்: அசத்தும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
அன்னுார்;அன்னுாரில் 800 விவசாயிகள் இணைந்து துவக்கிய நிறுவனம், பலரை தொழில்முனைவோராக உருவாக்கி உள்ளது.தமிழக அரசு கூட்டு பண்ணைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இந்த திட்டத்தில் 100 விவசாயிகள் சேர்ந்து விவசாய உற்பத்தி குழு அமைக்கப்படுகிறது.இதுபோல எட்டு விவசாய உற்பத்தி குழுவைச் சேர்ந்த 800 விவசாயிகள் தலா 1,000 ரூபாய் செலுத்தி எட்டு லட்சம் ரூபாய் முதலீட்டில் அன்னுார் கூட்டுப்

அன்னுார்;அன்னுாரில் 800 விவசாயிகள் இணைந்து துவக்கிய நிறுவனம், பலரை தொழில்முனைவோராக உருவாக்கி உள்ளது.தமிழக அரசு கூட்டு பண்ணைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இந்த திட்டத்தில் 100 விவசாயிகள் சேர்ந்து விவசாய உற்பத்தி குழு அமைக்கப்படுகிறது.இதுபோல எட்டு விவசாய உற்பத்தி குழுவைச் சேர்ந்த 800 விவசாயிகள் தலா 1,000 ரூபாய் செலுத்தி எட்டு லட்சம் ரூபாய் முதலீட்டில் அன்னுார் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை கடந்த ஆண்டு நவம்பரில் துவக்கினர்,இந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அல்லிகுளத்தில் நடந்தது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் லிங்குசாமி பேசுகையில், "முதல் கட்டமாக தேங்காய் கொள்முதல் செய்து விற்று வருகிறோம். கூடுதலாக நாங்கள் விலை தருவதால் விவசாயிகள் பயன்பெறுகின்றனர், முன்னணி நிறுவனத்தின் கால்நடை தீவன டீலர் சிப் எடுத்துள்ளோம். இதனால் தரமான கால்நடை தீவனம் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. அடுத்த கட்டமாக தேங்காயை மதிப்புக்கூட்டி விற்க உள்ளோம். விவசாய விளை பொருட்களை விற்பதற்கு வசதியாக கடை அமைக்க உள்ளோம். இதற்காக, ரோட்டில், பேரூராட்சி புதிதாக கட்டி வரும் வணிக வளாகத்தில், ஏல முறை இல்லாமல் ஒரு கடையை ஒதுக்கித் தரும்படி செயல் அலுவலர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் 23 லட்சம் ரூபாய் வரவு செலவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா, உதவி வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) சுகன்யா, நிறுவனத்தின் இயக்குனர் தங்கமுத்து, நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பவித்ரா ,செயலாளர் குப்புசாமி, கூட்டத்தில் உதவி வேளாண் அலுவலர் மகாலிங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் தியாகு, உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X