சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
அரூர் : காதல் திருமணம் செய்த விவகாரத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண், அரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஈஞ்சானுாரை சேர்ந்தவர் ஜனனி, 21; எம்.எஸ்சி., இரண்டாமாண்டு படித்து வந்தார். இராமாபுரத்தை சேர்ந்தவர் என்ஜினியரிங் படித்த பிரதீப், 25. வெவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும், கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். கடந்த, 5ல், தன்

அரூர் : காதல் திருமணம் செய்த விவகாரத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண், அரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஈஞ்சானுாரை சேர்ந்தவர் ஜனனி, 21; எம்.எஸ்சி., இரண்டாமாண்டு படித்து வந்தார். இராமாபுரத்தை சேர்ந்தவர் என்ஜினியரிங் படித்த பிரதீப், 25. வெவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும், கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். கடந்த, 5ல், தன் மகளை பிரதீப் கடத்தி சென்றதாக ஜனனியின் தந்தை விக்ரமன் புகார்படி, மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஜனனியை மீட்க போலீசார் காலதாமதம் செய்வதாக கூறி, அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, தாங்கள் இருவரும் கடந்த, 8ல் ஆந்திரா மாநிலம் குப்பத்திலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, பிரதீப், ஜனனி இருவரும் கம்பைநல்லுார் போலீசில் தஞ்சமடைந்தனர்.

நேற்று, அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காதல் தம்பதியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், கணவருடன் செல்வதாகவும் ஜனனி கூறினார். இதையடுத்து இருவரையும், போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X