பொது செய்தி

தமிழ்நாடு

சூடுபிடித்த தீபாவளி ஜவுளி விற்பனை

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஈரோடு : ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில், தீபாவளி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஈரோட்டில் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்கிழமை வரை நடக்கும் சந்தை, இந்த வாரம் வழக்கம்போல் நடந்தது. தீபாவளிக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், வெளியூர் வியாபாரிகள் அதிகம் வந்ததால், விற்பனை சூடு பிடித்தது. மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி, சில்லரை விற்பனையும் ஓரளவுக்கு

ஈரோடு : ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில், தீபாவளி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஈரோட்டில் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்கிழமை வரை நடக்கும் சந்தை, இந்த வாரம் வழக்கம்போல் நடந்தது. தீபாவளிக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், வெளியூர் வியாபாரிகள் அதிகம் வந்ததால், விற்பனை சூடு பிடித்தது. மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி, சில்லரை விற்பனையும் ஓரளவுக்கு நடந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தீபவாளி பண்டிகை சீசன் விற்பனை துவங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில வியாபாரிகளும் வந்தனர். கோல்கட்டா பேன்சி சேலைகள், ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கு தேவையான கவுன், சுடிதார், பூனம் சாரிஸ், ஜார்கண்ட் சாரிஸ், வேட்டி, சட்டை, பனியன், உள்ளாடைகளை மொத்தமாக வாங்கி சென்றனர். நேற்று, 60 சதவீதம் துணிகளை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில், வெளிமாநில வியாபாரிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் இருந்ததால், எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. தற்போது அதுபோன்ற இடையூறு இல்லாததால் தடையின்றி வியாபாரிகள் வந்தனர். இதனால் நடப்பாண்டு விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த காலத்தில் வேறு வேலைக்கு சென்ற சிறு வியாபாரிகளும், சந்தை கடை போட தொடங்கியுள்ளனர். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X