பொது செய்தி

தமிழ்நாடு

கோவை -- மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுமா?

Added : அக் 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:கோவை -- மேட்டுப்பாளையம் இடையே மீண்டும் பாசஞ்சர் ரயிலை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் அனைத்து வணிகர் சங்க அமைப்பாளர் அபிபுல்லா கூறியதாவது:கோவை - மேட்டுப்பாளையம் இடையே தினசரி ஐந்து முறை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெற்றனர். கொரோனா தொற்றால் இந்த ரயில் தற்காலிகமாக

பெ.நா.பாளையம்:கோவை -- மேட்டுப்பாளையம் இடையே மீண்டும் பாசஞ்சர் ரயிலை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் அனைத்து வணிகர் சங்க அமைப்பாளர் அபிபுல்லா கூறியதாவது:கோவை - மேட்டுப்பாளையம் இடையே தினசரி ஐந்து முறை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெற்றனர். கொரோனா தொற்றால் இந்த ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுதற்போது, இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், இந்த ரயில் காரமடை, வடகோவையில் மட்டும் நிறுத்தப்படுகிறது. துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நிற்பதில்லை.கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, பெரியநாயக்கன்பாளைத்தில் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால், வாகனங்களில் செல்வதில் இப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே, கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கிவந்த சாதாரண பாசஞ்சர் ரயிலை, மீண்டும் இயக்க, தெற்கு ரயில்வே நிர்வாகம், கோவை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அபிபுல்லா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X