சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வெற்றிக்கு எதிராக தி.மு.க.,வினர் ரகளை! காரமடையில் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.,வினர் ரகளை செய்ததால் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சி, 3வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு, தேர்தல் நடந்தது. இதில், 767 ஓட்டுகள் பதிவானது. அ.தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர் சுரேஷ், 372 ஓட்டுகளும், தி.மு.க., ஆதரவு பெற்ற

மேட்டுப்பாளையம்;ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.,வினர் ரகளை செய்ததால் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சி, 3வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு, தேர்தல் நடந்தது. இதில், 767 ஓட்டுகள் பதிவானது. அ.தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர் சுரேஷ், 372 ஓட்டுகளும், தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர் அர்ஜுனன், 365 ஓட்டுகளும் பெற்றனர்.ஏழு ஓட்டு வித்தியாசத்தில், சுரேஷ் முன்னிலையில் இருந்தார். இதில், 30 ஓட்டுகள் செல்லாதவை. இதையறிந்த அ.தி.மு.க., வினர், மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.இதை ஏற்க மறுத்த தி.மு.க., ஏஜன்ட் முருகேசன், வேட்பாளர் அர்ஜுனன் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனால், மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.இந்நிலையில் அ.தி.மு.க., வேட்பாளர் சுரேஷ் ஏழு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கூடியிருந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், கல்யாணசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உட்பட கட்சி நிர்வாகிகள் பி.டி.ஓ.வை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஒன்றிய அலுவலகத்தில் நுழைய முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதற்கு பதிலடியாக, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், ஜெ பேரவை மாவட்ட செயலர் நாசர், பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் வெற்றிக் கோஷம் எழுப்பியவாறு அப்பகுதியில் திரண்டனர்.

இவ்விரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் நிலை நிலவியது.மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஜெய்சிங் தலைமையில் போலீசார் அ.தி.மு.க. - தி.மு.க., வினரிடையே மோதல் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரு மணி நேரம் நீடித்த பரபரப்புக்குப்பின் பி.டி.ஓ., சந்திரா, மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோரிடம், ஓட்டு எண்ணிக்கை நடந்த விதம் குறித்து விளக்கிகூறினார். இதையடுத்து, தி.மு.க.,வினர் அமைதியாக கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X