பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் மழை நீடிப்பு: பாசன நீர் நிறுத்தம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
மேட்டூர் : டெல்டா மாவட்டங்களில் மழை நீடிப்பதால், மேட்டூர் அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று நிறுத்தப்பட்டது.தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 15 ஆயிரத்து, 479 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 19 ஆயிரத்து, 68 கனஅடியாக அதிகரித்தது.டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிப்பதால்

மேட்டூர் : டெல்டா மாவட்டங்களில் மழை நீடிப்பதால், மேட்டூர் அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று நிறுத்தப்பட்டது.

தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 15 ஆயிரத்து, 479 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 19 ஆயிரத்து, 68 கனஅடியாக அதிகரித்தது.

டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிப்பதால் வினாடிக்கு, 1,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை பாசன நீர்திறப்பு நேற்று காலை, 8:00 மணிக்கு, 100 கனஅடியாக குறைக்கப்பட்டது.கூடுதல் நீர்வரத்தால் நேற்று முன்தினம், 81.92 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 82.92 அடியாக உயர்ந்தது. கடந்த ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக நேற்று, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X