சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரமடையில் 91 வீட்டுமனை பட்டா ரத்து

Added : அக் 13, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை எத்தப்பன் நகரில், 91 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியதில், முறைகேடு இருப்பதாக வந்த புகாரை அடுத்து, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், பட்டாக்களை ரத்து செய்துள்ளார்.காரமடை பேரூராட்சிக்குட்பட்ட எத்தப்பன் நகரில், 3.50 ஏக்கர் நிலத்தில், 91 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டன.இதில், ஒரே நபருக்கு, 2, 3 பட்டாக்கள், வெளியூர் நபர்களுக்கும், வேறு

மேட்டுப்பாளையம்:காரமடை எத்தப்பன் நகரில், 91 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியதில், முறைகேடு இருப்பதாக வந்த புகாரை அடுத்து, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், பட்டாக்களை ரத்து செய்துள்ளார்.காரமடை பேரூராட்சிக்குட்பட்ட எத்தப்பன் நகரில், 3.50 ஏக்கர் நிலத்தில், 91 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டன.இதில், ஒரே நபருக்கு, 2, 3 பட்டாக்கள், வெளியூர் நபர்களுக்கும், வேறு சமுகத்தினருக்கும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, முறைகேடு இருப்பதாக, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.இதையடுத்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து அறிக்கை அனுப்பி உள்ளார். இதன்பேரில், எத்தப்பன் நகரில் வழங்கப்பட்ட, 91 வீட்டுமனை பட்டாக்களை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராம்குமார், ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X