ஐந்து கிராமத்தில் விவசாய நிலம்; பத்திரப்பதிவு செய்ய மறுப்பு : கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சூலுார்:ஐந்து கிராமங்களில் உள்ள விவசாய பூமி மற்றும் மனைகளை பத்திர பதிவு செய்ய மறுக்கும் பிரச்னை குறித்து, விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.சூலுாரில் விமானப்படைத் தளம் உள்ளது. இதன் விரிவாக்கத்துக்காக, சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட காடாம்பாடி, காங்கயம் பாளையம், கலங்கல், அப்பநாயக்கன் பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் உள்ளிட்ட

சூலுார்:ஐந்து கிராமங்களில் உள்ள விவசாய பூமி மற்றும் மனைகளை பத்திர பதிவு செய்ய மறுக்கும் பிரச்னை குறித்து, விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.சூலுாரில் விமானப்படைத் தளம் உள்ளது. இதன் விரிவாக்கத்துக்காக, சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட காடாம்பாடி, காங்கயம் பாளையம், கலங்கல், அப்பநாயக்கன் பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் உள்ளிட்ட கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த, 2010 ஆண்டு முதல் குறிப்பிட்ட சர்வே எண்கள் கொண்ட விவசாய நிலங்கள், வீட்டுமனையிடங்கள் முடக்கி வைக்கப்பட்டன. நிரந்தர கட்டுமானங்கள் கட்டக்கூடாது என, அறிவிக்கப்பட்டது.அதனால், அந்த இடங்களின் உரிமையாளர்கள், அவற்றை விற்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், நிலத்தை விற்கவோ, வாங்கவோ எந்த தடையும் இல்லை என, நில உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.ஆனாலும், சூலுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுத்து வந்தனர். இதனால், விவசாயிகள், நில உரிமையாளர்கள் விரக்தியடைந்தனர். நேற்று முன்தினம் கலெக்டரை சந்தித்து மனு அளித்து , பிரச்னை குறித்து முறையிட்டனர்.கலெக்டரிடம் விவசாயிகள் அளித்த மனு விபரம்:சொந்தமாக நிலம் இருந்தும் பயன்படுத்த முடியாமல், கடந்த, 10 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வருவாய்த்துறை மறுக்கிறது. நிலத்தை பரிவர்த்தனை செய்ய, பத்திரப்பதிவுத் துறை மறுக்கிறது. இறுதியில் கோர்ட்டில் முறையிட்டு, எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இதற்கிடையில், விமானப்படைத்தள விரிவாக்கத்துக்கு, 400 ஏக்கர் நிலம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை எந்த இடங்கள், சர்வே எண்கள் எவை என தெளிவுபடுத்த வேண்டும். அந்த இடங்கள் போக, மற்ற இடங்களை, அதன் உரிமையாளர்கள் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கான உத்தரவை வெளியிட்டு, பல ஆண்டுகளாக உள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் சமீரன் உடனடியாக, பத்திரப்பதிவு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தாமதிக்காமல் பத்திரப்பதிவுகளை செய்து தர, உத்தரவிட்டதை கேட்டு, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravindhar Gandhidas - coimbatore,இந்தியா
13-அக்-202111:20:42 IST Report Abuse
Ravindhar Gandhidas செய்திக்கு நன்றி.கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தீர்வில்லாமல் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை. ஒரு நில உரிமையாளர் தன்னுடைய நிலம் சம்பந்தபட்ட ஆவணங்களை தன்னுடையதா என்று கூட சரி பார்க்க முடியாமல், இது விரிவாக்கத்திற்கு உட்பட்டதா இல்லையா என புரியாமல், மாறி மாறி வெளியிடப்படும் செய்திகளால் அலைக்கழிக்கப்பட்டு, வங்கியில் உண்மையான விருத்தி செய்ய கூட கடன் வாங்க முடியாமல் அலை கலைக்கப்பட்டு.. பாவம். கையக படுத்தும் திட்டம் இருந்தால் இந்த கிராமத்தில் இந்த சர்வே எண்ணில் உள்ள நிலங்கள் கையகப்படுத்த படும் என்றும் அதற்கான நெறிமுறைகளை சார்ந்து கையகப்படுத்தும் process தொடங்க வேண்டியது தானே ? இருபது வருடம், பத்து வருடம் என அலைக்கழிக்க பட வேண்டிய அவசியம் என்ன. இதனால் அந்த கிராமங்களின் வளர்ச்சி -சூலூர் அருகில் இருந்தும் -அழிக்க பட்டிருக்கிறது. மத்திய அரசும் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கான ஈட்டை நேரடியாக வழங்க உறுதி அளித்துள்ளது, ஈடு குறையென்றால் மாண்புமிகு நீதி மன்றத்தை நாட வழியும் உண்டு. இழப்பீடு வழங்கும் போது மேற்படி கால கட்டத்தில் இருந்த தீர்வற்ற தன்மையால் இந்த கிராமங்கள் சூலூர் அருகில் உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். அருகில் உள்ள வாரப்பட்டி கிராமத்தில் தனியார் நிலம் தமிழக அரசு வாங்கி defence hub தொடங்கி இராணுவ தளவாடங்கள் சார்ந்த தொழிற்சாலைகள் தொடங்க போவதாகவும் செய்தி. இந்த பிரச்சனைக்கு மதிப்பிற்குரிய கோவை மாவட்ட கலெக்டர் அவர்களும் மத்திய அரசும் விரைந்து முடிவெடுத்து விவசாயிகளுக்கு உரித்தான ஈட்டையும் வெளிப்புற தன்மையோடு அறிவிப்பார்களேயானால் அனைவருக்கும் நலம். ஒவ்வொருமுறையும் மாண்புமிகு நீதி மன்றத்தை நாடி அனைவரின் நேரத்தை வீணடித்து ஆண்டு கணக்கில் தீர்வில்லாமல் இருபது நல்ல அரசாட்சி அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X