சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கோபுரத்தில் ஏறி போராட்டம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:நிலப்பிரச்சனை தொடர்பான விவகாரத்தில், இரு விவசாயிகள், உயர் மின் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 50. விவசாயி. அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே இவருக்கு சொந்தமான பூமி உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு கட்டுமான பணிகள் நேற்று நடந்தன. அங்கு வந்த எதிர் தரப்பினர், பணிகளை தடுத்ததால் இரு

கருமத்தம்பட்டி:நிலப்பிரச்சனை தொடர்பான விவகாரத்தில், இரு விவசாயிகள், உயர் மின் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 50. விவசாயி. அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே இவருக்கு சொந்தமான பூமி உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு கட்டுமான பணிகள் நேற்று நடந்தன. அங்கு வந்த எதிர் தரப்பினர், பணிகளை தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சமாதானம் பேச முயன்றனர். அதற்குள் திடீரென தங்கவேலுவும், அவரது சகோதரர் மகனும் அருகில் உள்ள உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தனர். போலீசாரும், எதிர் தரப்பினரும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். மதியத்துக்கு மேல், விவசாயிகள் கீழே இறங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X