பொது செய்தி

தமிழ்நாடு

குன்னூரில் கன மழை: மரங்கள் விழுந்து மின்தடை

Added : அக் 13, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுாரில் நள்ளிரவில் பெய்த மழையில் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த மழையால், உழவர்சந்தை ரோடு, உபாசி ரோடு, நஞ்சப்பா சத்திரம் பகுதிகளில் மரங்கள் விழுந்தன. அதில், மின்கம்பங்கள் மீது விழுந்ததால் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது.தகவலின் பேரில்,

குன்னுார்:குன்னுாரில் நள்ளிரவில் பெய்த மழையில் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த மழையால், உழவர்சந்தை ரோடு, உபாசி ரோடு, நஞ்சப்பா சத்திரம் பகுதிகளில் மரங்கள் விழுந்தன. அதில், மின்கம்பங்கள் மீது விழுந்ததால் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது.தகவலின் பேரில், நேற்று காலை, தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர். மின் வாரிய ஊழியர்கள் சீரமைத்ததால், காலை, 9:00 மணியளவில் மின் வினியோகம் வழங்கப்பட்டது. மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையோர நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்பரித்து கொட்டுவதால், 'சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல கூடாது,' என, வனத்துறையினர், போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X