சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம்: போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், தொழிலாளர் சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்யக்கூடாது என, அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், வரும், 16ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு தேயிலைத்தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் அமீது தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), வினோத் (எல்.பி.எப்.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), வீரமணி (வி.சி.,), பரமசிவம்

வால்பாறை:வால்பாறையில், தொழிலாளர் சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம் செய்யக்கூடாது என, அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், வரும், 16ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு தேயிலைத்தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் அமீது தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), வினோத் (எல்.பி.எப்.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), வீரமணி (வி.சி.,), பரமசிவம் (சி.ஐ.டி.யு.,) உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தோட்ட தொழிலாளர் சம்பளத்தில், தொழில்வரி பிடித்தம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், கடந்த, 4ம் தேதி முடீஸ் (பி.பி.டி.சி.,) அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனையடுத்து, இரண்டு எஸ்டேட்களில் தொழிலாளர்கள் சம்பளத்தில், தொழில்வரி பிடித்தம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.பிற எஸ்டேட்களிலும் தொழில்வரி பிடித்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, வரும், 16ம் தேதி டாடா எஸ்டேட் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, என, முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X