பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகளை தடுத்தது வனத்துறை: எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
வால்பாறை;வால்பாறை, அக்காமலை பகுதியில் வனத்துறையினர் யானைகளை விரட்ட மேற்கொண்ட நடவடிக்கையால், தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில், பருவ மழைக்கு பின், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.தனித்தனி கூட்டமாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தேயிலை காட்டை

வால்பாறை;வால்பாறை, அக்காமலை பகுதியில் வனத்துறையினர் யானைகளை விரட்ட மேற்கொண்ட நடவடிக்கையால், தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில், பருவ மழைக்கு பின், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.தனித்தனி கூட்டமாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள துண்டு சோலையிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. வாழை, பலா, கொய்யா போன்றவைகளையும் உட்கொள்கின்றன.வனவிலங்கு - மனித மோதல் தடுப்புக்குழுவை சேர்ந்த வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவதால், யானைகளால் ஏற்படும் சேதம் குறைந்து வருகிறது.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில், கடந்த நான்கு நாட்களாக, 12 யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள, தேயிலை காட்டில் முகாமிட்டுள்ளன.தகவல் அறிந்த வனத்துறையினர், மாலை நேரத்தில் யானைகள் முகாமிட்டுள்ள பகுதிக்கு சென்று, இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழையாதவாறு விரட்டுகின்றனர். வனத்துறையினர் நடவடிக்கையால், அக்காமலை எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.'எஸ்.எம்.எஸ்.,' அறிவிப்புவால்பாறையில் யானைகள் நடமாட்டம் குறித்து, வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு சார்பில், தினமும் மொபைல்போனில குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கின்றனர்.சோலையாறு சிலுவைமேடு, பச்சமலை, அக்காமலை, குரங்குமுடி, முருகன் எஸ்டேட், இஞ்சிப்பாறை, கெஜமுடி 'டனல்' உள்ளிட்ட பகுதிகளில், யானைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X