அரசியல் செய்தி

தமிழ்நாடு

தென்குமாரபாளையத்தில் தி.மு.க., வெற்றி: இடைத்தேர்தல் முடிவால் கட்சியினர் குஷி

Added : அக் 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய உள்ளாட்சி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், 169 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த, 9ம் தேதி நடந்தது.எஸ்.சி., பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த ஊராட்சி தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய உள்ளாட்சி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், 169 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த, 9ம் தேதி நடந்தது.எஸ்.சி., பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த ஊராட்சி தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நாரயணமூர்த்தி, ஆட்டோ ரிக்சா சின்னத்திலும்,அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரஸ்வதி பூட்டு சின்னத்திலும் களமிறங்கினர். ஊராட்சிக்குட்பட்ட, 2,967 வாக்காளர்களில், 2,312 பேர் ஓட்டளித்தனர்.ஓட்டு எண்ணிக்கை நேற்று தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வீடியோ பதிவுடன்நடந்த ஓட்டு எண்ணிக்கையில், ஆறு அலுவலர்கள் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஓட்டு எண்ணிக்கை காலை, 8:00 மணிக்கு துவங்கியது. தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இதனால், அ.தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினர்.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், கோவை ரோட்டில் திரண்டிருந்த கட்சியினர் 'டிரம்ஸ்' இசைத்து, கோஷமிட்டு கொண்டாடினர்.ஓட்டு எண்ணிக்கையில், ஆட்டோ ரிக்சா சின்னத்தில், 1,451 ஓட்டுகளும், பூட்டு சின்னத்தில், 838 ஓட்டுகளும் பதிவாகியிருந்தன. 23 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன. இடைத்தேர்தலில், 613 ஓட்டுகள் வித்தியாசத்தில் நாராயணமூர்த்திவெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.வெற்றி பெற்று வெளியில் வந்தவரை, தி.மு.க.,வினர் கொண்டாட்டத்துடன் வரவேற்று அழைத்துச்சென்றனர்.தி.மு.க., வசமிருந்த இந்த ஊராட்சி தலைவர் பதவியை, மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. தெற்கு ஒன்றியத்தில், ஏற்கனவே ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் தி.மு.க., பலம் பெற்றுள்ள நிலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வார்டு உறுப்பினர்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், போளியகவுண்டன்பாளையம், 4வது வார்டு; ஜமீன் முத்துார், 6வது வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன.அதில், போளியகவுண்டன்பாளையத்தில் லட்சுமி என்பவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.ஜமீன்முத்துாரில், செந்தில்குமார் மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த வார்டில், மொத்த ஓட்டுகள், 634; பதிவானவை, 422. இதில், செந்தில்குமார் - 289 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். குப்புசாமி - 129 ஓட்டுகள் பெற்றார்; நான்கு ஓட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X