பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு போன் போதுமே! பராமரிப்பில்லாத நான்கு வழிச்சாலை

Added : அக் 13, 2021
Share
Advertisement
பராமரிப்பில்லாத நான்கு வழிச்சாலைபொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், ஊஞ்சவேலாம்பட்டி வரையிலும், சென்டர் மீடியனுடன் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. இருசக்கர வாகனம் செல்ல சிரமமாக உள்ளது.எம்.அம்சவேணி, ஊஞ்சவேலாம்பட்டி.லாரிகள் ஆக்கிரமிப்பால் இடையூறுபொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, நல்லுாரில் விரிவுபடுத்திய பகுதியில்,

பராமரிப்பில்லாத நான்கு வழிச்சாலை
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், ஊஞ்சவேலாம்பட்டி வரையிலும், சென்டர் மீடியனுடன் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. இருசக்கர வாகனம் செல்ல சிரமமாக உள்ளது.எம்.அம்சவேணி, ஊஞ்சவேலாம்பட்டி.
லாரிகள் ஆக்கிரமிப்பால் இடையூறு
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, நல்லுாரில் விரிவுபடுத்திய பகுதியில், ரோட்டின் இருபக்கமும் லாரிகளை நிறுத்தியுள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. ரோடு விரிவாக்கம் செய்ததும் வீணாகிவருகிறது.என்.நடராஜ், ஜமீன்முத்துார்.மழை நீர் வடிகால் வசதியில்லைநெகமம் ரோடு, கப்பளாங்கரையில் மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தால், பலத்த மழை பெய்யும் போது, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. ரோட்டின் இருபக்கமும் வடிகால்கள் வசதி ஏற்படுத்த வேண்டும்.என். தங்கவேல், கப்பளாங்கரை.
ரோடு வசதி ஏற்படுத்துவாங்களா?
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட, பாலக்காடு ரோடு, முருகன் நிலையம் அடுத்துள்ளது லட்சுமிபுரம் லே --- அவுட். இப்பகுதியில், பல ஆண்டுகளாக ரோடு அமைக்கப்படாததால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது.எஸ்.பிரதீப்குமார், பொள்ளாச்சி.

ரோட்டோரத்தில் குப்பை குவிப்பு
நெகமம் அடுத்துள்ள கோப்பனுார்புதுாரில், ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள் ரோட்டை ஆக்கிரமித்து, வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைக்கிறது. குப்பை தொட்டி அமைத்து குப்பை சேகரித்து அகற்ற வேண்டும்.ஏ. குணசேகரன், கோப்பனுார்புதுார்.
ஒளிரும் ஸ்டிக்கர் தேவை
மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்துார் அருகில் உள்ள பாலத்தில், போதிய ஒளிரும் ஸ்டிக்கர் இல்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.-ஆர். முருகேசன், மடத்துக்குளம்.ஆக்கிரமிப்புகளால் விபத்துமடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் தேசிய நெடுஞ்சாலை இருபுறமுள்ள ஆக்கிரமிப்புகளால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்.-எஸ்.கர்ணன், மடத்துக்குளம்.
சிக்னல் அமைக்கப்படுமா?
உடுமலை --- பொள்ளாச்சி ரோட்டில் முக்கோணம் பகுதியில், ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கார், கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. எனவே இங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.எம்.சரவணன், பூலாங்கிணர்.கூடுதல் குடிநீர் வசதி வேண்டும்உடுமலை பஸ் ஸ்டாண்டில் போதிய குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அங்கு வரும் மக்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பயணிகள் நலன் கருதி கூடுதல் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.ஆர்.செல்வம், உடுமலை.
நிழற்கூரை அமைக்க வேண்டும்
உடுமலை அருகே தேவனுார்புதுார், பஸ் ஸ்டாபில் நிழற்கூரை இல்லை. மக்கள் வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர். இதனால், பயணிகள் நலன் கருதி அங்கு நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.கண்ணன், உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X