கரும்பு அரவை மார்ச்சில் துவக்க பயிரிடுவோர் சங்கம் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு அரவை மார்ச்சில் துவக்க பயிரிடுவோர் சங்கம் கோரிக்கை

Added : அக் 13, 2021
Share
மடத்துக்குளம்:கரும்பு அரவை பருவத்தை, வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் துவக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவத்தை, 2022 மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடங்க வேண்டும். அதற்கு முன், கரும்பு வெட்டும்

மடத்துக்குளம்:கரும்பு அரவை பருவத்தை, வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் துவக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவத்தை, 2022 மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடங்க வேண்டும். அதற்கு முன், கரும்பு வெட்டும் தொழிலாளர்களை, பிற மாவட்டம், மாநிலங்களிலிருந்து அழைத்து வர வேண்டும். தற்போது கரும்புக்கு அரசு கொடுக்கும் விலை, போதுமானதாக இல்லை. இதனால் நடப்பு நிதியாண்டில் ஒரு டன்னுக்கு, 3,500 ரூபாய் வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் கூலியையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.கரும்பு கிரையத்தொகையினை, 15 தினங்களுக்குள் வழங்க வேண்டும். ஆலையை நவீனப்படுத்த அரசு அறிவித்த தொகையை வழங்க வேண்டும். ஆலை நன்கு இயங்க துறை சார்ந்த திறமையான அதிகாரிகளை முன்கூட்டியே நியமனம் செய்ய வேண்டும்.தொழிலாளர்களுக்கு நிலுவையாக உள்ள சம்பளத்தை வழங்குவதோடு, பி.எப்.,எல்.ஐ.சி., தொகைகளை செலுத்தவேண்டும். இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள எரிசாராய ஆலையில் உற்பத்தி தொடங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X