பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்க பழங்குடியினர் கோரிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுமலை:'சென்டில்மென்ட்'களில், வன அனுபவ உரிமையின் பேரில், விளைநிலம் ஒதுக்கப்பட்டாலும், வேளாண்துறையால் விவசாய இடுபொருட்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், பழங்குடியினர் 'செட்டில்மென்ட்' பகுதிகள் உள்ளது. இங்கு, காடர், எரவாளர், புலையர், முதுவர், மலைமலசார் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வசிக்கின்றனர்.

உடுமலை:'சென்டில்மென்ட்'களில், வன அனுபவ உரிமையின் பேரில், விளைநிலம் ஒதுக்கப்பட்டாலும், வேளாண்துறையால் விவசாய இடுபொருட்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், பழங்குடியினர் 'செட்டில்மென்ட்' பகுதிகள் உள்ளது. இங்கு, காடர், எரவாளர், புலையர், முதுவர், மலைமலசார் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்களின் நலன் கருதி, பழங்குடியினர் நலத்துறையால், வன அனுபவ உரிமை பெறுவதன் நோக்கில், விவசாய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அவ்வகையில், 2006ம் ஆண்டு, வன உரிமை சட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்தாரும், குறிப்பிட்ட பரப்பில், விவசாயப்பணிகளை மேற்கொள்கின்றனர். பருவ காலத்திற்கு ஏற்ப பயிர் மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு, தாட்கோ நிதியுதவியுடன் விவசாய இடுபொருட்கள் வழங்க, வேளாண்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பழங்குடியின மக்கள் கூறுகையில், 'சில செட்டிமென்ட்களில் மட்டுமே பல ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படுகிறது. வேளாண்துறையால், விவசாயம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இடுபொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X