சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முடீசில் பிடிப்பட்ட புலி குட்டி: மானாம்பள்ளியில் தொடர் சிகிச்சை

Added : அக் 13, 2021
Share
Advertisement
வால்பாறை:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, மானாம்பள்ளி வனச்சரகம் முடீஸ் பகுதியில், கடந்த மாதம், 28ம் தேதி, உடல் சோர்வான நிலையில் பிடிபட்ட ஒரு வயது ஆண் புலி குட்டிக்கு, ரொட்டிக்கடையில் உள்ள வனஉயிரின மீட்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனத்துறை கால்நடை மருத்துவர்கள் காயம்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை

வால்பாறை:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, மானாம்பள்ளி வனச்சரகம் முடீஸ் பகுதியில், கடந்த மாதம், 28ம் தேதி, உடல் சோர்வான நிலையில் பிடிபட்ட ஒரு வயது ஆண் புலி குட்டிக்கு, ரொட்டிக்கடையில் உள்ள வனஉயிரின மீட்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனத்துறை கால்நடை மருத்துவர்கள் காயம்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். வனத்துறையினரின் தொடர் சிகிச்சையால், புலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இந்நிலையில், ரொட்டிக்கடை வனவிலங்கு சிகிச்சை மையம் ரோடு ஓரத்தில் இருப்பதாலும், பொதுமக்கள் தினமும் புலியை காண வருவதால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், வாகனங்கள் அதிக அளவில் ரோட்டில் செல்லும் போது ஏற்படும் சப்தத்தால், புலிக்குட்டி ஓய்வெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வால்பாறை நகரிலிருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ள மானாம்பள்ளி வனத்துறை கெஸ்ட்ஹவுஸ் பகுதிக்கு, புலி இடமாற்றம் செய்யப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது, என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X