பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கோட்டை; தி.மு.க., வசமானது! 25 ஆண்டுக்குப்பின் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த, திவான்சாபுதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கலைவாணி வெற்றி பெற்றார். 25 ஆண்டுக்குப்பின், வெற்றி பெற்றதால், கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஆனைமலை ஒன்றியம், திவான்சாபுதுார் ஊராட்சியில், 8,556 வாக்காளர்கள் உள்ளனர். தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., ஆதரவில் வேட்பாளர் கலைவாணி, அ.தி.மு.க., ஆதரவில் வேட்பாளர்

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த, திவான்சாபுதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கலைவாணி வெற்றி பெற்றார். 25 ஆண்டுக்குப்பின், வெற்றி பெற்றதால், கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஆனைமலை ஒன்றியம், திவான்சாபுதுார் ஊராட்சியில், 8,556 வாக்காளர்கள் உள்ளனர். தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., ஆதரவில் வேட்பாளர் கலைவாணி, அ.தி.மு.க., ஆதரவில் வேட்பாளர் சரோஜினி போட்டியிட்டனர்.தேர்தலில், 6,555 பேர் ஓட்டளித்தனர்; 76.4 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இந்நிலையில், ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில், ஓட்டுக்கள் எண்ணும் மையத்தில், நேற்று, 3 மேஜைகள் அமைக்கப்பட்டு, நான்கு சுற்றுக்களாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் சாய்ராஜ் சுப்ரமணியம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சசிக்குமார் மேற்பார்வையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.இதில், அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜினி, 2,075 ஓட்டுகள் பெற்றார். தி.மு.க., வேட்பாளர் கலைவாணி, 4,372 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 105 ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.ஒவ்வொரு சுற்று முடிவிலும், தி.மு.க., வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். இறுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை விட, 2,297 ஓட்டுக்கள் அதிகம் பெற்று, அபார வெற்றி பெற்றார். வேட்பாளர் ஆட்டோ சின்னத்தில் நின்று வென்றதால், தாரை தப்பட்டை முழங்க கட்சியினர் ஆட்டோக்களில் உலா வந்தனர். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.கடந்த, 25 ஆண்டுகளாக திவான்சாபுதுார் அ.தி.மு.க.,வினரின் கோட்டையாக இருந்தது. இந்த முறை தி.மு.க., வசமானது. அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க.,வினர் ஆரவாரம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X