பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றியை நிர்ணயித்த ஒரு ஓட்டு: வில்லனாக மாறிய செல்லாத ஓட்டு

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், ஆமந்தகடவு ஊராட்சி, 5 வது வார்டுக்கான இடைத்தேர்தல், ஓட்டுப்பதிவு, கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், வேலுத்தாய், ஜீவிதா போட்டியிட்டனர். மொத்தமுள்ள, 292 ஓட்டுகளில், 123 பெண்; 102 ஆண்கள் உட்பட, 225 பேர் ஓட்டளித்தனர்.ஓட்டுப்பெட்டிகள் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், போலீஸ் பாதுகாப்புடன், வைக்கப்பட்டு, நேற்று காலை ஓட்டு எண்ணும்பணிகள் துவங்கியது. தேர்தல்

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், ஆமந்தகடவு ஊராட்சி, 5 வது வார்டுக்கான இடைத்தேர்தல், ஓட்டுப்பதிவு, கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், வேலுத்தாய், ஜீவிதா போட்டியிட்டனர். மொத்தமுள்ள, 292 ஓட்டுகளில், 123 பெண்; 102 ஆண்கள் உட்பட, 225 பேர் ஓட்டளித்தனர்.ஓட்டுப்பெட்டிகள் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், போலீஸ் பாதுகாப்புடன், வைக்கப்பட்டு, நேற்று காலை ஓட்டு எண்ணும்பணிகள் துவங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான குழுவினர், ஓட்டு எண்ணிக்கை பணியில், ஈடுபட்டனர்.இதில், வேலுத்தாய், 112 ஓட்டுகளும், ஜீவிதா 111 ஓட்டுகளும் பெற்றனர். இரண்டு ஓட்டுகள், செல்லாதவையாகும்.இதனால், ஒரு ஓட்டு வித்தியாசத்தில், வேலுத்தாய் வெற்றி பெற்றார்; அதற்கான சான்றிதழை, அலுவலர்கள் அவர்களிடம் வழங்கினர். இடைத்தேர்தலில், செல்லாத ஓட்டு, வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.ஆமந்தகடவு ஊராட்சி, 5 வார்டு உறுப்பினர் மற்றும் துணைத்தலைவராக இருந்தவர், பதவியை ராஜினாமா செய்தததால், இந்த தேர்தல் நடத்தப்பட்டது.எனவே, மீண்டும், ஊராட்சி துணைத்தலைவரை, தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல், வரும் 22ம் தேதி ஊராட்சி அலுவலகத்தில் நடக்கும். வரும், 20ம் தேதி வெற்றி பெற்ற, வேலுத்தாய் பதவியேற்று கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X