பொது செய்தி

தமிழ்நாடு

கிணத்துக்கடவு தேர்வு நிலை பேரூராட்சி... நகராட்சியாக தரம் உயருமா?மக்களின் பல ஆண்டு கனவு நனவாகுமா?

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது, மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும். இதனை நிறைவேற்றி, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.கிணத்துக்கடவு பேரூராட்சியானது, சட்டசபை தொகுதி தலைமையிடமாக உள்ளது. கடந்த, 1956, ஆக.,31ல் கிணத்துக்கடவு கிராம ஊராட்சியானது.வளர்ச்சி, மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது, மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும். இதனை நிறைவேற்றி, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.கிணத்துக்கடவு பேரூராட்சியானது, சட்டசபை தொகுதி தலைமையிடமாக உள்ளது. கடந்த, 1956, ஆக.,31ல் கிணத்துக்கடவு கிராம ஊராட்சியானது.வளர்ச்சி, மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் முன்னேற்றத்தை கணக்கிட்டு, 1968, ஏப்.,1ம் தேதி இரண்டாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, 1973ல், முதல் நிலை பேரூராட்சியாகவும், 2004ல் சிறப்பு நிலை பேரூராட்சியாகவும், 2009ல் தேர்வு நிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்ந்தது. கோவை - பொள்ளாச்சி இடையே, அமைந்துள்ள கிணத்துக்கடவு பேரூராட்சி, 8.69 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. தாமரைக்குளம், நெ.10 முத்துார், சிக்கலாம்பாளையம், செக்போஸ்ட், லட்சுமிநகர் மற்றும்இம்மிடிபாளையத்தை எல்லைகளாக கொண்டுள்ளது.எல்லாம் இருக்குஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வாரச்சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், காய்கறிகள் சேமிப்புக்கான குளிர்சாதன அறை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், எம்.எல்.ஏ., அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்றவை கிணத்துக்கடவில் உள்ளன. எல்லையை ஒட்டி, நான்கு இன்ஜினியரிங், ஒரு வேளாண் பொறியியல் கல்லுாரியும் உள்ளன.பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாக, சாலைப்புதுார், கல்லாங்காட்டுப்புதுார், சிங்கராம்பாளையம், பகவதிபாளையம் கிராமங்கள் அமைந்துள்ளன. இவற்றின், 15 வார்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். கிணத்துக்கடவு மட்டுமின்றி, சுற்றிலும் உள்ள ஊராட்சிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இணைக்கணும்!
கிணத்துக்கடவு பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்துகின்றனர்.பேரூராட்சியுடன், சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம், துணைமின்நிலையம், ரயில்வே ஸ்டேஷன், லட்சுமிநகர், கருப்பம்பாளையம், ஏழூர் பிரிவு பகுதிகளையும்; வடபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட மணிக்கண்டபுரம், சிக்கலாம்பாளையம், இம்மிடிபாளையம் பகுதியையும் இணைத்து, பேரூராட்சியின் எல்லையை விரிவுபடுத்தி, நகராட்சியாக தரம் உயர்த்தலாம்.
அழுத்தம் தேவை
நகராட்சியாக தரம் உயரும்போது, டி.எஸ்.பி., அலுவலகம், கோர்ட், தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, அரசு கலைக்கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி, மாணவர்களுக்கான விளையாட்டரங்கம் ஆகியன உருவாகும்.கிணத்துக்கடவு நகராட்சி உருவாக, எம்.எல்.ஏ., மற்றும் ஆளுங்கட்சியினர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.சிறப்புக்கு குறைவில்லை!கிணத்துக்கடவு பகுதியானது, பாலக்காட்டு கணவாயில் இருந்து, 40 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளதால், தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்து வருகிறது.இதனால், மாமாங்கம் ஓடை உருவானது. ஆண்டு முழுவதும் பாசன கிணறுகள் நிரம்பி வழிந்ததால், 'கிணத்துக்கடவு' என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

நகரின் மையப்பகுதியில், பொன்மலை வேலாயுதசுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருத்தேர், 60 அடி உயரம் கொண்டது. மலையடிவாரத்தை சுற்றி, தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது. தக்காளி மார்க்கெட்டுக்கு பெயர் பெற்றுள்ளது.காலத்தின் கட்டாயம்!கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் கூறுகையில், ''கிணத்துக்கடவு பேரூராட்சி எல்லையை விரிவுபடுத்தி, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. கோவை, பொள்ளாச்சிக்கு இடையே, கிணத்துக்கடவுநகராட்சி அமைவது காலத்தின் கட்டாயமாகும். சட்டசபை தொகுதிக்கான எம்.எல்.ஏ., அலுவலகமும் இங்கு உள்ளது. நகராட்சியாக உயர்த்தப்பட்டால், வளர்ச்சி பல மடங்கு பெருகும். மக்களின் வாழ்க்கை தரமும், வசதிகளும் மேம்படும். பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நகராட்சியாக தரம் உயர்த்த, சட்டசபையில் குரல் கொடுப்பேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X