பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்காங்கே நின்று கொள்ளும் அரசு பஸ்கள்! சுழற்சி முறையில் தள்ளும் பயணிகள்

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுமலை;குடிமங்கலம் ஒன்றிய கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், ஆங்காங்கே நின்று கொள்வதால், பயணிகள் சுழற்சி முறையில், பஸ்சை தள்ளும் நிலை ஏற்படுகிறது.உடுமலை போக்குவரத்து கிளை சார்பில், அரசூர், வீதம்பட்டி, அம்மாபட்டி, பூளவாடி உட்பட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இக்கிராமங்களில் இருந்து, உடுமலை நகரம் உட்பட பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ்களை மட்டுமே கிராம

உடுமலை;குடிமங்கலம் ஒன்றிய கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், ஆங்காங்கே நின்று கொள்வதால், பயணிகள் சுழற்சி முறையில், பஸ்சை தள்ளும் நிலை ஏற்படுகிறது.உடுமலை போக்குவரத்து கிளை சார்பில், அரசூர், வீதம்பட்டி, அம்மாபட்டி, பூளவாடி உட்பட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இக்கிராமங்களில் இருந்து, உடுமலை நகரம் உட்பட பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ்களை மட்டுமே கிராம பயணிகள் நம்பியுள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, முழு அளவில், கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.மேலும், தற்போது இயக்கப்படும் பஸ்களும் போதிய பராமரிப்பு இல்லாமல், பயணிகளை, அவதிக்குள்ளாக்குகிறது. அவ்வகையில், உடுமலையில் இருந்து, அரசூர் கிராமத்துக்கு, வழித்தட எண், 4ஏ பஸ் இயக்கப்படுகிறது.இந்த பஸ் 'செல்ப்' மோட்டார் பிரச்னையால், ஒவ்வொரு முறை நிறுத்தும் போதும், மீண்டும் ஸ்டார்ட் ஆவதில்லை. இதனால், பயணிகள் இறங்கி, பஸ்களை தள்ளி, ஸ்டார்ட் செய்ய வேண்டிய நிலை உள்ளது.உடுமலை பஸ் ஸ்டாண்ட், அரசூர் உட்பட இடங்களில், பஸ்சை நிறுத்தும் போது, ஒவ்வொரு முறையும், இப்பிரச்னை ஏற்பட்டு வருகிறது.பயணிகள் சுழற்சி முறையில், இறங்கி, பஸ்சை தள்ளும் நிலைக்கு, போக்குவரத்து கிளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதே போல், ஊரடங்கிற்கு முன்பு கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கவும், அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X